Monday, November 9, 2009

0 எப்ஐசிசிஐயின் மீடியா மாநாட்டுக்கு தலைவரானார் கமல்

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் எப்ஐசிசிஐ சார்பில், சென்னையில் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 2 நாள் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைத்துறையின் சகல பிரிவுகளிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ள கமல்ஹாசன், முதல் முறையாக எப்ஐசிசிஐயின் மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்கப் போகிறார். திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு எப்ஐசிசிஐ கொடுத்துள்ள முதல் கௌரவம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முன்பு நமது நாட்டின் பொழுதுபோக்குத் துறையின் திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், எப்ஐசிசிஐயின் இந்த முதலாவது வித்தியாசமான முயற்சியில் நான் இடம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த மாநாட்டில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரைத்துறையினரும் பங்கேற்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகளுடன் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் அலசப்படவுள்ளது. மேலும் திரைத் துறையினர் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைளையும் இந்த மாநாட்டின் மூலமாக மத்திய அரசுக்குக் கொண்டு செல்ல உள்ளனர் எனவும் கமல் கூறி இருக்கிறார்...............

0 comments:

Post a Comment

Download This Template

Monday, November 9, 2009

எப்ஐசிசிஐயின் மீடியா மாநாட்டுக்கு தலைவரானார் கமல்

Posted by ஜெறின் at 1:19 PM

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் எப்ஐசிசிஐ சார்பில், சென்னையில் நவம்பர் 18ம் தேதி தொடங்கி 2 நாள் நடைபெறும் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரைத்துறையின் சகல பிரிவுகளிலும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ள கமல்ஹாசன், முதல் முறையாக எப்ஐசிசிஐயின் மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்கப் போகிறார். திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு எப்ஐசிசிஐ கொடுத்துள்ள முதல் கௌரவம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முன்பு நமது நாட்டின் பொழுதுபோக்குத் துறையின் திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், எப்ஐசிசிஐயின் இந்த முதலாவது வித்தியாசமான முயற்சியில் நான் இடம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த மாநாட்டில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள், நிபுணர்கள், திரைத்துறையினரும் பங்கேற்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகளுடன் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த மாநாட்டில் அலசப்படவுள்ளது. மேலும் திரைத் துறையினர் சந்தித்து வரும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைளையும் இந்த மாநாட்டின் மூலமாக மத்திய அரசுக்குக் கொண்டு செல்ல உள்ளனர் எனவும் கமல் கூறி இருக்கிறார்...............

0 comments on "எப்ஐசிசிஐயின் மீடியா மாநாட்டுக்கு தலைவரானார் கமல்"

Post a Comment